தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 31. Oktober 2011

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 21. August 2011

பெரும் பொருளியல் நிலைத் தேக்கம்

பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் (Great Recession (சில நேரங்களில் குறைந்த தேக்கநிலை, நீள் தேக்கநிலை,என்றும் 2009இன் உலக தேக்கநிலை) 2000களின் பத்தாண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பொருளியல் சரிவைக் குறிக்கிறது. 

 இத்தேக்கநிலையின் தாக்கம் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருந்து வந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் இந்த தேக்கநிலை எப்போது துவங்கியது, முடிந்தது என்பதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன; 

சில நாடுகள் இத்தேக்கநிலையை உணரவில்லை.   சீன மக்கள் குடியரசு, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் எவ்வித தேக்கநிலையையும் எதிர்கொள்ளவில்லை.

 ஐரோப்பாவிலிருந்த பல நாடுகள் முதலாவதிற்கு ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தேக்கநிலையையும் எதிர்கொண்டன.

இந்த இரண்டாவது தேக்கநிலையை ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் எதிர்கொள்ளவில்லை.


இந்தப் பொருளியல் நிலைத் தேக்கம் உலகப் பொருளியல்நிலையில் பெரும் தாக்கமேற்படுத்தியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான மோசமான உலகளாவிய தேக்கநிலையாக இது அமைந்தது.

இந்தப் பெரும் சர்வதேச பொருளாதார மந்தநிலையின்போது பல நிதிநெருக்கடிகள் ஏற்பட்டன;

இந்த மந்தநிலை ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கலாலும் 2008-2009 உலகப் பொருளாதார நெருக்கடியாலும் உருவானது. ஐரோப்பிய அரசுகளின் கடன் நெருக்கடி சிக்கன நடவடிக்கைகள், உயர்ந்த குடும்பக் கடன்கள், வணிக சமமின்மை, உயர்ந்தநிலையிலான வேலையின்மை, 2014இல் குறைந்த வளர்ச்சி எதிர்பார்ப்பு  போன்றவற்றின் தாக்கங்களால் பல நாடுகளில் முழுமையான மீளப் பெறுகைக்கு தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை


Samstag, 20. August 2011

உலக வங்கி (World Bank)

உலக வங்கி (World Bank) என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு  திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும்.

உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும்.

உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். 

உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. 

உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (MIGA), பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID)

உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.


தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியத்தையும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் "பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்" என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இன்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று.

சனிக்கிழமை


Freitag, 19. August 2011

பொருளாதார அமைப்புக்கள்

பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி,பகிர்வு,மற்றும் நுகர்வு போன்றவை ஒர் குறிப்பிட்ட சமூகத்தில் நிர்வகிக்கபடும் விதத்தினை பொருளாதார அமைப்புக்கள் (Economic systems) தீர்மானிக்கின்றன.

பொருளாதார அமைப்புக்களானது கிடைப்பருமையான வளங்களின் ஒதுக்கீடு, பாவனை தொடர்பில் மக்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் இணைக்கின்றது.

 ஒவ்வொரு சமூக அமைப்பும், நாடுகளும் சில அடிப்படை பொருளியல் பிரச்சனைகளான 
எதனை உற்பத்தி செய்தல்?,
எவ்வாறு உற்பத்தி செய்தல்?, 
யாருக்காக உற்பத்தி செய்தல்?, 
எவ்வளவு உற்பத்தி செய்தல்? 

போன்றவற்றிக்கு விடையளித்தல் அவசியமாகின்றது. 

எல்லா சமூகங்களிலும்,நாடுகளிலும் இப்பிரச்சனை பொதுவானது எனினும் அந்தந்த நாடுகள்,சமூகங்களில் இவற்றிக்கு விடையளிப்பதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறைகள்,சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார அமைப்புகள் வேறானவைகள் ஆகும்.

உலகில் பொதுவாக காணப்படுகின்ற பொருளியல் அமைப்புகளாவன:

  • சந்தைப் பொருளாதார அமைப்பு (Market economy) - அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.

  • திட்டமிடல் பொருளாதார அமைப்பு (Planned economy) - கியூபா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.

  • கலப்பு பொருளாதார அமைப்பு (Mixed economy) - இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை


Donnerstag, 18. August 2011

பிரித்தானிய பவுண்ட்

பிரித்தானிய பவுண்ட் (பவுண்ட் ஸ்டெர்லிங்க்; Pound Sterling) என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும்.
இதன் சிற்றலகு  பென்னி ஆகும் 

வியாழக்கிழமை


Mittwoch, 17. August 2011

அமெரிக்க டாலர்























அமெரிக்க டாலர் (dollar, USD) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது.

இந்த அமெரிக்கன் டாலர் தங்களுடைய  நாட்டின் நாணயமாக பயன்படுத்தும்   10 நாடுகள் 

 1)பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)
2) கிழக்குத் திமோர்
3) எக்குவடோர்
4) எல் சல்வடோர
5) மார்ஷல் தீவுகள்
 6)மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
7) பலாவு
8) பனாமா
 9)துர்கசும் கைகோசும் (ஐக்கிய இராச்சியம்)
10) அமெரிக்கா

புதன்கிழமை


Dienstag, 16. August 2011

ஃபோரிண்ட் அல்லது போரிண்ட்
















ஃபோரிண்ட் அல்லது போரிண்ட் (சின்னம்: Ft; குறியீடு: HUF) அங்கேரி நாட்டின் நாணயம். இது 1946ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. 1980கள் வரை இதன் மதிப்பு ஓரளவு நிலையாக இருந்தது. 1990களின் தொடக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக போரிண்டின் மதிப்பு குறையத் தொடங்கியது. 2001ல் அங்கேரி முழு நணய மாற்று முறையை அமல்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் புழக்கத்திலுள்ள ஒரே கிழக்கு ஐரோப்பிய நாணயம் ஃபோரிண்ட்.

செவ்வாய்க்கிழமை


Montag, 15. August 2011

யூரோ (Euro) அல்லது ஐரோ

ஐரோ அல்லது யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. 

1) ஆஸ்திரியா
2)பெல்ஜியம் 
3)சைப்ரஸ்,
4) எஸ்த்தோனியா,
5) பின்லாந்து,
6) பிரான்ஸ், 
7)ஜெர்மனி, 
8)கிரீஸ், 
9)அயர்லாந்து, 
10)இத்தாலி, 
11)லற்வியா 
12)லிதோனியா 
13)லக்சம்பேர்க், 
14)மால்ட்டா, 
15)நெதர்லாந்து, 
16)போர்த்துக்கல்,
17)  சிலோவேக்கியா, 
18)சுலோவீனியா, 
19)ஸ்பெயின் ஆகியவை
இந்த 19நாடுகளாகும்.

 இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது

 மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். "யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 14. August 2011

பொருளியலின் தந்தை

பொருளியலின் தந்தை அடம்ஸ்மித்
ஆவார் .

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 13. August 2011

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்ன?

5. நாடுகளின் அரசியல் ஸ்திரமற்ற தன்மை
பல்வேறு உணவுற்பத்த்திசெய்யும் நாடுகளினதும் அரசியல், பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை உலக உணவுற்பத்தியில் பெரும் பாதிப்பை உண்டுபண்ணுகின்றது.

மேற்குநாடுகளின் உலகமயமாதல் என்றபோர்வையில், உணவுற்பத்திசெய்யும் நாடுகளில் உணவுற்பத்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துசெல்கின்றது. புதிய, புதிய மத்தியதர வர்க்கத்துக்கான தொழில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன

சனிக்கிழமை


Freitag, 12. August 2011

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்ன?

4. அதிகரித்துவரும் மத்தியதர வர்க்கம்
முக்கியமாக இந்தியா, சீனா போன்ற சனத்தொகை அதிகமுள்ள நாடுகளில், அதிகரித்துவரும் மத்தியதரவர்க்கத்தை சேர்ந்தவர்களால், உணவுப்பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. அவர்கள் இப்போது அதிக உணவினை உட்கொள்ளுகின்றார்கள். இந்தியாவில் 350 மில்லியன் மக்கள் நடுத்தர வர்க்கத்தினராக உள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். அந்த மக்களுக்கு வளம் அதிகரிக்கும்போது அவர்களின் வாங்கும் சக்தியும், சத்தான உணவுகளை நாடிச் செல்வதும் அதிகரிக்கிறது. அது உலக அளவில் விலையேற்றத்துக்கு வழி வகுக்கிறது

உலகத்தில் ஒட்டுமொத்தமாக அதிகரித்துவரும் எண்ணிக்கையிலான பணக்காரர்களினால் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், ஏறக்குறைய 100 மில்லியன் அளவிலான வறியவர்கள் உணவுப்பொருட்களை வாங்கமுடியாதவர்களாகின்றார்கள்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 11. August 2011

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்ன?

3. எதிர்பாராத காலநிலை மாற்றங்கள்
உலகின் முக்கிய உணவுப்பொருள் உற்பத்திசெய்யும் நாடுகளில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதகமான காலநிலை மாற்றங்கள் (வரட்சி சூறாவளி வெள்ளம் மாறுபட்ட மழைவீழ்ச்சி) உலக சனத்தொகைக்கான உணவுவழங்கலை பெருமளவு பாதித்துள்ளது அத்துடன் அதிகரித்துள்ள உலக சனத்தொகை, சுற்றுச்சூழல் மீது அதிக அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. அதன்விளைவான சூழல் மாசடைதல் எதிர்பாராத காலநிலை மாற்றங்களுக்கு வழிகோலுகின்றது. அவ்வாறே புவி வெப்பமடைதல் உணவுற்பத்தியை பெருமலவில் பாதிக்கின்றது.

வியாழக்கிழமை


Mittwoch, 10. August 2011

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்ன?

2. சனத்தொகைப்பெருக்கம்
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் 9 பில்லியனை தாண்டவிருக்கும் உலகசனத்தொகைப்பெருக்கம் உலக உணவுத்தட்டுப்பாட்டுக்கு இன்னொரு முக்கிய காரணியாகும் என்றுமில்லாதவாறு அதிகளவான வயிறுகளுக்கு உணவளிக்கவேண்டிய அதேநேரம், அதிகரித்துள்ள சனத்தொகையால் நீர், நிலம், எண்ணெய் என்பவற்றின் பாவனையும் அதிகரித்துள்ளது. முக்கியமாக பயிர்ச்செய்கைக்கான நிலப்பவனை குறைவடைவதில் அதிகரித்துவரும் சனத்தொகை செல்வாக்குசெலுத்துகின்றது. அதிகரித்த சனத்தொகையால் இன்று நாடுகள்பல பாலைவனங்களாக (காடழிப்பு) மாறிக்கொண்டிருகின்றன.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 9. August 2011

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்ன?

1. உயிரியல் எரிபொருள் (Bio Fuels) உற்பத்தி
இன்று வளர்ச்சியடைந்துவரும் நாடுகளால் உலக உணவுத்தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணியாக வளர்ச்சியடைந்த நாடுகளால் அவர்களது எரிபொருள் தேவைகளை நிறைவுசெய்ய, மேற்கொள்ளப்படும் உயிரியல் எரிபொருள் (எதனோல்) உற்பத்தியே சுட்டிக்கட்டப்படுகின்றது அத்துடன் உணவாகப் பவிக்கப்படும் தானியங்கள் இதற்காக பெருமளவில் பாவிக்கப்படுவது உலகளாவிய உணவுப்பொருட்களின் விலையதிகரிப்புக்கு முக்கிய காரணியாகின்றது உண்பதற்கான உணவுற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவு உற்பத்தி நிலங்கள் பலவும் இப்போது இந்த உயிரியல் எரிபொருள் உற்பத்திக்கான தானியங்களை விளைவிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 8. August 2011

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்ன?

இன்றையகாலப்பகுதியில் உலகநாடுகள் பல 
 எதிர்நோக்குகின்ற உணவுப் பொருள்தட்டுப்பாடு 
விலையதிகரிப்பு அவற்றிற்கான காரணங்கள் 
 சம்பந்தமாக இங்கே ஆராயப்படுகின்றன உலக 
அமைதியை பாரதூரமாக அச்சுறுத்தக்கூடிய 
 காரணிகளுள் ஒன்றாக இன்று உணவு காணப்படு
கின்றது உணவுப் பொருட் களின் அதிகரித்த 
விலைகள் (சிலபொருட்களின் விலைகள் இரண்டு 
வருட காலப் பகுதியில் இருமடங்காகியுள்ளன) 
 பல நாடுகளிலும் கலவரங்களையும், ஆர்ப் 
பாட்டங்களையும் தோற்றுவித்திருக்கின்றன
மெக்சிக்கோவிலிருந்து பாக்கிஸ்தான் வரை 
 எதிர்ப்பார்ப்பாட்டங்கள் வன்முறைகளாக 
மாறியுள்ளன[9]. 2008 ஜனவரியில் மேற்கு ஆபிரிக்க 
நாடான Burkina Faso இல் மூன்று நகரங்களில் 
கலவங்கள் ஏற்பட்டு அரச கட்டடங்கள் எரியூட்டப்
பட்டன, களஞ்சியங்கள் சூறையாடப்பட்ட்டன 
அதே மாதத்தில் கமரூனில் நடந்த வண்டி ஓட்டுனர் 
களின் எண்ணைவிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
உணவு விலைகளுக்கு எதிரான மிகப்பெரியதொரு 
ஆர்ப்பாட்டமாக மாறி 20 பேரின் உயிர்களை காவு 
 கொண்டது .அதே மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் 
கடந்தவருட இறுதியில் செனகலிலும், Mauritania 
விலும் வெடித்திருந்தன.கடந்த ஒக்டோபர்
 மாதத்தில் இந்திய மேற்கு வங்கத்தில் 
ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கான உணவு-
நிவாராண களஞ்சியங்களை எரியூட்டியிரு
ந்தார்கள். களஞ்சியங்களின் உரிமையாளர்கள் 
அரச நிவாரணப்பொருட்களை கருப்பு சந்தையில்
 விற்பதாக அங்கே ஆர்ப் பாட்டக்காரர்கள் குற்றம்
சாட்டியிருந்தார்கள்[9]. மொத்தத்தில் உலக 
அமைதிக்கு பெரியதொரு அச்சுறுத்தலாக இந்த 
உலகளாவிய உணவுநெருக்கடி மாறி 
இருக்கின்றது. ஆசியநாடுகளில் கடந்த மூன்று 
 தசாப்தங்களாக ஏற்படுத்தப்பட்ட பசுமைப்
புரசியின் காரணமாக உணவுநெருக்கடியின் 
தாக்கம் மிகப்பாரதூரமாக இல்லாவிட்டாலும், 
ஆபிரிக்காவிலோ நிலைமை மிக மோசமடைந்து
விட்டது. அங்கே மக்கள் உணவின்றி தவிக்கும்
 நிலை உருவாகியிருக்கின்றது.கடந்த ஒரு வருட
 காலப்பகுதிக்குள், அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப்பொருட்களின் விலைகள் ஏறக்குறைய 
இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. உலகிலுள்ள 
மிக வறிய மக்களில் ஏறக்குறைய 100 மில்லியன் 
மக்கள் இப்போது, உணவிற்காக செலவளிக்க 
முடியாத நிலையிலுள்ளார்கள் என ஐ.நா சபை 
அண்மையில் கணிப்பிட்டுள்ளது. இலங்கையில் 
உணவுப்பொருட்களின் விலைகள் முன்னைய 
ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, கணிசமான 
அளவுக்கு உயர்ந்து ள்ளன. சாதாரண வறுமைக்
கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு, எகிறிச்செல்லும் 
உணவுபொருடகளின் விலைகள் பெரும் பிரச்சினை
களாக மாறியுள்ளன. அரசியல், இலஞ்ச ஊழல்
 நடவடிக்கைகளுடன், இந்த உலகளாவிய உணவுத்
தட்டுப்பாடும், உணவுப் பொருட்களின் விலைகளை 
தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.கீழே 
உலகளாவிய இன்றைய உணவுத் தட்டுப் பாட்டுக்கு
காரணமான ஐந்து விடயங்கள் ஆராயப்படுகின்றன,

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 7. August 2011

உயிரியல் எரிபொருள் (Bio Fuels) உற்பத்தி

இன்று வளர்ச்சியடைந்துவரும் நாடுகளால் உலக
 உணவுத் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணியாக
வளர்ச்சியடைந்த நாடுகளால் அவர்களது எரி
பொருள் தேவைகளை நிறைவுசெய்ய மேற்
கொள்ளப்படும் உயிரியல் எரிபொருள் (எதனோல்)
உற்பத்தியே சுட்டிக் கட்டப்படுகின்றது .உணவாகப்
பாவி க்கப்படும் தானியங்கள் இதற்காக பெருமளவில்
பாவிக்கப்படுவது உலகளாவிய உணவுப் பொருட்களின்
விலையதிகரிப்புக்கு முக்கிய காரணியாகின்றது
உண்பதற்கான உணவுற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட
பெருமளவு உற்பத்தி நிலங்கள் பலவும் இப்போது
இந்த உயிரியல் எரிபொருள் உற்பத்திக்கான
தானியங்களை விளைவிப்பதற்காக பயன்
படுத்தப்படுகின்றன. 

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 6. August 2011

உலக உணவு நெருக்கடிக்கான காரணம்

உலக உணவு நெருக்கடிக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. சனத்தொகை அதிகரிப்பு பெருந்தொகை உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் நிலவிய காலநிலை சீர்கேடுகள், உயிரியல் எரிபொருள் தயாரிப்பின் மீதான தீவிர நாட்டம், அமெரிக்காவின் ஸ்திரமற்ற கொள்கைகளால் தோன்றிய பொருளாதாரச் சரிவுஃஉலகில் அதிகளவு சனத்தொகை கொண்ட நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாட்டில் உள்ள மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இந்த மக்கள் தமது உணவில் அதிகளவு இறைச்சியைச் சேர்க்கத் தொடங் கியிருக்கிறார்கள். 100 கலோரி சக்தியுடைய இறைச்சித்துண்டை உருவாக்குவ தற்காக 700 கலோரி விலங்குணவைத் தயாரிக்க வேண்டும். விலங்குகளுக்கு உணவாக மனிதர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக உற்பத்தி செய்ய ப்படும் தானியங்களை விடவும் பலமடங்கு தானியத்தை உற்பத்தி செய்வது அவசியம். இது தானியங்களுக்கான கேள்வியை அதிகரித்து உணவு நெருக்கடிக்கு வித்திடு கின்றது.சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு குறை வடை தல் மற்றும் அதிகமாக கோதுமை விளையும், அவுஸ்திரேலியாவில் நிலவிய வரட்சி சோளம் முதலான தானிய வகைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எதனோல் முதலான இரசாயனங்கள் உயிரியல் எரிபொருட்களை உற்பத்தி செய்தல். இதனால் உணவு உற்பத்திக்கான விவசாய நிலங்களின் அளவும் குறைகின்றது. அத்துடன் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதனால் விவசாயச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.இதுவும் உணவு உற்பத்திகளின் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். அரிசி, கோதுமை மா போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கும் போது உலகவிநியோக ஸ்தர்கள் பதற்றமடைகிறார்கள். அவர்கள் விநியோகிக்கப்படும் அரிசியை ஒட்டு மொத்தமாக விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றார்கள் இதனால் விலைத் தளம்பல் ஏற்படுகின்றது. உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் ஏற்றுமதியை நிறுத்தி விடுகின்றது. இதன் காரணமாக முற்றாக இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் தத்தளிக்கின்றன. இந்தியா, பிரேசில் போன்ற அரிசி ஏற்றுமதி நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்ததால் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டதை நாம் அறிவோம்.

சனிக்கிழமை


Freitag, 5. August 2011

சனத்தொகைப்பெருக்கம்

இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் 9 பில்லியனை தாண்டவிருக்கும் உலகசனத்தொகைப்பெருக்கம் உலக உணவுத்தட்டுப்பாட்டுக்கு இன்னொரு முக்கிய காரணியாகும். என்றுமில்லாதவாறு அதிகளவான வயிறுகளுக்கு உணவளிக்கவேண்டிய அதேநேரம், அதிகரித்துள்ள சனத்தொகையால் நீர், நிலம், எண்ணெய் என்பவற்றின் பாவனையும் அதிகரித்துள்ளது. முக்கியமாக பயிர்ச்செய்கைக்கான நிலப்பவனை குறைவடைவதில் அதிகரித்துவரும் சனத்தொகை செல்வாக்குசெலுத்துகின்றது. அதிகரித்த சனத்தொகையால் இன்று நாடுகள்பல பாலைவனங்களாக (காடழிப்பு) மாறிக்கொண்டிருகின்றன.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 4. August 2011

காலநிலை மாற்றங்கள்


எதிர்பாராத காலநிலை மாற்றங்கள் 





உலகின் முக்கிய உணவுப்பொருள் உற்பத்திசெய்யும் நாடுகளில் கடந்தகாலங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதகமான காலநிலை மாற்றங்கள் (வரட்சி, சூறாவளி, வெள்ளம், மாறுபட்ட மழைவீழ்ச்சி) உலக சனத்தொகைக்கான உணவுவழங்கலை பெருமளவு பாதித்துள்ளது. அதிகரித்துள்ள உலக சனத்தொகை, சுற்றுச்சூழல் மீது அதிக அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. அதன்விளைவான சூழல் மாசடைதல், எதிர்பாராத காலநிலை மாற்றங்களுக்கு வழிகோலுகின்றது. அவ்வாறே புவி வெப்பமடைதல் உணவுற்பத்தியை பெருமலவில் பாதிக்கின்றது. 

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 3. August 2011

மத்தியதரவர்க்கம்

அதிகரித்துவரும் மத்தியதர வர்க்கம்
முக்கியமாக இந்தியா சீனா போன்ற சனத்தொகை அதிகம் 
உள்ள நாடுகளில் அதிகரித்துவரும் மத்தியதரவர்க்கத்தை 
சேர்ந்தவர்களால் உணவுப்பொருட்களுக்கான கேள்வி 
அதிகரித்துள்ளது அவர்கள் இப்போது அதிக உணவினை உட்கொள்ளுகின்றார்கள். இந்தியாவில் 350 மில்லியன் 
மக்கள் நடுத்தர வர்க்கத் தினராக உள்ளனர் இது அமெரிக்க 
மக்கள் தொகையை விட அதிகம் அந்த மக்களுக்கு வளம் 
அதிகரிக்கும்போது அவர்களின் வாங்கும் சக்தியும்
சத்தான உணவுகளை நாடிச் செல்வதும் அதிகரிக்கிறது 
அது உலக அளவில் விலையே ற்றத்துக்கு வழி 
வகுக்கிறது உலகத்தில் ஒட்டுமொத்தமாக அதிகரித்து
வரும் எண்ணிக்கையிலான பணக்காரர்களினால் 
உணவுப் பொருட் களின் விலைகள் அதிகரித்து
உள்ளதால், ஏறக்குறைய 100 மில்லியன்அளவிலான 
வறியவர்கள் உணவுப்பொருட்களை வாங்கமுடியாத
வர்களாகின்றார்கள். 

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 2. August 2011

நாடுகளின் ஸ்தீரமற்ற அரசியல்


நாடுகளின் அரசியல் ஸ்தீரமற்ற தன்மை 

பல்வேறு உணவுற்பத்திசெய்யும் நாடுகளினதும் அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை உலக உணவுற்பத்தியில் பெரும் பாதிப்பை உண்டுபண்ணுகின்றது. மேற்கு நாடுகளின் உலகமயமாதல் என்றபோர்வையில், உணவுற்பத்திசெய்யும் நாடுகளில் உணவுற்பத்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துசெல்கின்றது. புதிய மத்தியதர வர்க்கத்துக்கான தொழில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 1. August 2011

ஜி-8 உச்சி மாநாடு உணவு விலையேற்றத்தைத் தடுக்குமா?

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் போது பெரும்பாலான நாடுகள் உணவு உற்பத்தி மற்றும் உணவில் சுயதேவைப் பூர்த்தி போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தன.குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்நிலைமையை மிகத் தெளிவாக அவதானிக்க முடிந்தது உலகமயமாக்கல் மற்றும் பிராந்தியமயமாக்கல் என்பவற்றைக் கொண்டகருதுகோளின்கீழ்சுய தேவைப் பூர்த்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டன இக்கருதுகோள் தனி ஒரு உலகளாவிய நகரமாக உலகை உருவாக்குகின்றது எனினும் ஒரு நாட்டுக்குள் உற்பத்தி செய்வது ஒப்பீட்டு ரீதியில் பிரதிகூலமானதாக இருந்து வருவதாகக் கருதப்படும் பண்டங்களை இறக்குமதி செய்வது விவேக பூர்வமானதெனக் கருதப்பட்டது.இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கீழ் உலக உணவுப் பாதுகாப்பு என்ற விடயத்தின் இயல்பினையும் ஒரு வளர்முக நாடு என்ற முறையில் இது இலங்கைக்கு எந்த அளவில் பொருந்துகின்றது என்பதனையும் பரிசீலனை செய்வதற்கு இப்பொழுது தருணம் வந்துள்ளது.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்



Sonntag, 31. Juli 2011

உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன?

எல்லாக் காலங்களிலும் எல்லா மக்களினாலும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை என உணவுப் பாதுகாப்புக்கு வரை விலக்கணம் வழங்கப்பட்டுள்ளது.உலக உணவு உற்பத்தியில் கணிசமான அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டு வந்திருந்த போதிலும் கடந்த தசாப்தத்தின் போது பல வளர்முக நாடுகளில் பட்டினியாலும் போசாக்கு இன்மையாலும் அல்லல்படும் மக்களின் அளவு அதிகரித்து வந்துள்ளது என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.1974 இல் உணவு சம்பந்தமாக நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தசாப்த காலத்தில் பட்டினியை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது.ஐக்கிய நாடுகளின் உணவுக்கான உச்சி மாநாடுகளில் ஒன்று 1996 ஆம் ஆண்டிலும் அடுத்த மாநாடு 2002 இலும் நடைபெற்றது.இவ் இரண்டு மாநாட்டிலும் சர்வதேச சமூகம் பட்டினியைக் குறைத்து சத்துணவு இன்மையையும் அகற்றுவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் மூன்று ஐக்கிய நாட்டு மாநாடுகளிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் பலன் தரவில்லை. இறுதி இரண்டு உச்சி மாநாடுகளிலும் உலகத் தலைவர்களே இவ்வுத்தரவாதங்களை வழங்கினர்.150 நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய மூன்றாவது உலக உச்சி மாநாடு 12.06.2008 அன்று நடைபெற்றது. தற்போது 30 நாடுகளில் உணவு சம்பந்தமான கிளர்ச்சிகள் வெடித்துள்ளன.60 இற்கு மேற்பட்ட நாடுகளில் அரிசி தானியப் பற்றாக்குறை நிலவுகின்றது. இந்த நெருக்கடியைக் கையாள அவசரமானதும், ஒருங்கமைக்கப்பட்டதுமான நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி.மூன், ரோமாபுரி உச்சி மாநாட்டில் உணவுப் பற்றாக்குறையைப் பற்றிக் கூறும்போது 'சுவைபீறியாவில் அண்மைக்காலத்தில் அரிசியை மூடைக்கணக்கில் வாங்கிய மக்கள் இப்போது கிண்ண அளவில் வாங்குபவர்களை நான் சந்தித்து உள்ளேன் என கூறினார்.பசி, பட்டினியால் வருந்துபவர்களுக்கு உதவும் ஐ.நா ஏஜென்சியின் நிர்வாகப் பணிப்பாளர் 'ஜோரெற்ஷிறான்" நாங்கள் துரிதகதியில் செயற்படாதவிடத்து உலகின் 100 கோடி வறிய மக்கள் இருநூறு கோடிகளாக அதிகரிப்பர். ஏனெனில் அவர்களுக்குப் பொருட்களை வாங்கும் பணத்தகுதி உணவு, எரிபொருட்களின் விலை இரட்டிப்பானதால் அரைவாசியாகக் குறைந்துள்ளது எனக்கூறினார்.உரோமாபுரியைத் தளமாகக்கொண்ட உணவு விவசாய நிறுவன த்தின் அனுசரணையில் மூன்று நாட்களாக நடைபெற்ற உச்சி மாநாடு பிரகடனப் படுத்துவதாவது, உலகளாவிய ரீதியில் பட்டினிக்கும், போசாக்கின் மைக்கும் எதிராகப் போராடும் பயபக்தியான பிரகடனமாகும். ஆனால் இப்பிரகடனம் பலன் தருமா? என்பதே அனைவரினது எதிர்பார்ப்பாகும்.போதியளவிலான உணவு விநியோகம் ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பை வழங்கி வந்தபோதிலும் அது குடும்ப உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதில்லை. கிடைக்கக்கூடியதாக இருக்கும் உணவு அது தேவைப்படும் மக்களை சென்றடைய வேண்டும். இது போதியளவிலான உற்பத்தி மற்றும் நிலையான விநியோகம் என்பவற்றின் மீதே தங்கியுள்ளது.மறுபுறத்தில் உணவுப் பகிர்வு மக்கள் உணவை பௌதீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெற்றுக்கொள்ளும் நிலையை உறுதிப்படுத்தல் வேண்டும்.உலகில் தாராளமாக உணவு இருந்து வருகின்றது. 1950 தொடக்கம் உலக உணவு உற்பத்தி குடித்தொகையின் வளர்ச்சியிலும் பார்க்க வேகமாக வளர்ச்சி யடைந்து வந்துள்ளது. வறிய மக்கள் போதியளவிலான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்குமேயானால் உலக உணவு உற்பத்தி இதைவிடவும் துரித வேகத்தில் அதிகரித்திருக்க முடியும்.இத் தகைய சாதகமான நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட மனித குலத்தில் ஐந்தில் ஒரு பகுதியினர் பட்டினியால் துன்புற்று வருகின்றனர்.அனைத்து நாடுகளிலும் குடித்தொகை அதிகரித்து வருவதுடன் இணைந்த விகிதத்தில் உணவுக்கான கேள்வியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.உலகிலே வேகமாக அழிந்துவரும் விடயங்களில் ஒன்று விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகை மக்கள் விவசாய நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து விவசாய நடவடிக்கையில் மக்களை ஈடுபட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 30. Juli 2011

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 29. Juli 2011

ஜி-8 நாடுகளின் உச்சி மகாநாடு யப்பானில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் அதிகரித்து வரும் கச்சாய் எண்ணெய் விலையுயர்வு, உணவுப் பொருட்கள் விலையேற்றம், விலைவாசி உயர்வு எனப் பல்வேறு பொருளாராதப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க சனாதிபதி புஷ் வறுமை ஒழிப்பு, உலக பொருளாதாரம், எரிபொருள் விலையு யர்வு, உணவுப் பொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு என்பன குறித்து விவாதித்துள்ளார். இப்படி சிந்திக்கும் அமெரிக்காவில் விலைகளை நிலையாக வைத்திருக்கும் நோக்குடன் அமெரிக்கா மிகையுற்பத்தியாக உள்ள கோதுமையை அழித்து விடுகின்றது.எனவே, இந்நோக்கம் கொண்ட அமெரிக்கா ஜி-8 நாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளினூடாக உலக உணவுப் பிரச்சினையைத் தீர்க்குமா?

வெள்ளிக்கிழமை


Donnerstag, 28. Juli 2011

உலக உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை

இரண்டாவது உலகப்போரின் பின்னர் குடித்தொகை திடீர் 
வளர்ச்சிப்போக்கில் சென்றது.விவசாயத்துறை உற்பத்தித்
திறனில் வீழ்ச்சிப்போக்கில் சென்றது.உணவு உற்பத்திக்காக
உற்பத்திசெய்யப்படும் தானியங்களில் பெரும்பகுதி 
எரிபொருள்தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றது
.மக்களின் விலங்குஉணவு நுகர்வுஅதிகரித்ததின் காரணமாக 
உணவுக்காக உற்பத்திசெய்யப்படும் ஒருபகுதித்தானியங்கள் 
விலங்குகளுக்கு உணவாகப்பயன்படுத்தப்பட்டது. 
விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை
 குறைவடைந்து சென்றமை போன்ற உலக உணவு பற்றாக்
குறைக்கு பிரதான காரணங்களாக சுட்டிக் காட்டப்படுகின்றது.
உலக உச்சி மாநாடுகளின் பிரகடனங்கள் எவையும் உலக 
உணவு உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை. ஒவ்வொரு 
நாடுகளும் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் பெரும் நிதியை 
உணவு உற்பத்தி அடிப்படை நடவடிக்கைகளுக்கு ஒதுக்க
வேண்டும்.இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் 
நாடு நில ஆக்கிரமிப்புக்கும் பொருளாதார சீரழிவுக்கும் வித்திட
க்கூடிய வகையில் யுத்தத்திற்கு கூடிய நிதியை ஒதுக்கியதன்
விளைவே ஒரு விவசாய நாடான இலங்கையில் ஒரு கிலோக்
கிராம் அரிசி நூறுரூபா மேல் தென்பகுதியில் விற்கப்படுகின்றது .
எனவே, ஒரு நாடு உணவு உற்பத்தியில் மேம்பட வேண்டுமாயின் 
பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.உட்கட்ட
மைப்புக் களான வீதி அமைத்தல்,பாலம் அமைத்தல், நீர் வாய்க்
கால்களை அமைத்தல்,குளம் புனரமைத்தல் போன்ற நடவடிக்கை
களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலீடுகளை மேற்கொள்ளல்.
விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களுக்கு ஊக்குவிப்பு
க்களை வழங்கல், விவசாய கல்வியைப்புகட்டுதல் முறையான 
கமத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகளை 
வழங்குதல். அத்துடன் பசளை, எரிபொருள் முதலான விவசாய
 உள்ளீடுக ளுக்குரிய விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் .
இரசாயன உரவகைகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடியதான கூடிய 
விளைச்சல் தரவல்ல பயிர் இனங்களை அறிமுகம் செய்தல் 
இவ்விடய ங்களை முதன்மைப்படுத்தி ஒவ்வொரு அரசும் நிதி 
ஒதுக்கீடு செய்து மேற்தர ப்பட்ட செயற்பாட்டில் முதலீடு 
செய்தால் நிச்சயம் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். 
2100 ஆம் ஆண்டு உலக சனத்தொகை தற்போது இருக்கும் 
சனத்தொகையைவிட இரண்டு மடங்காக உயரும் நிலை 
இருப்பதால் உலக உணவு உற்பத்தி யையும் இரண்டு மடங்காக
 அதிகரிக்க சகல தரப்பினரும் முன்வர வேண்டும். 

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 27. Juli 2011

மக்கள் தொகை வளர்ச்சி

வளர்ச்சியடைந்த நாடு வளர்முக நாடு உலகம்

1900 ம் ஆண்டில் 56 கோடி 107 கோடி 163 கோடி
1950 ம் ஆண்டில் 84 கோடி 1 68 கோடி 252 கோடி
1990 ம் ஆண்டில் 124 கோடி 408 கோடி 532 கோடி
2025 ம் ஆண்டில் 140 கோடி 710 கோடி 850 கோடி
2100 ம் ஆண்டில் 150 கோடி 1020 கோடி 1170 கோடி

சராசரி குடித்தொகை வளர்ச்சி விகிதம்

காலமும் சராசரி குடித்தொகை வளர்ச்சி விகிதமும்
1995 – 2000 - 1.37
2000 – 2005 - 1.27
2005 – 2010 - 1.20
2010 – 2015 - 1.12
2015 – 2020 - 1.03
2020 – 2025 - 0.90
2025 – 2030 - 0.81
2030 – 2035 - 0.70
2035 – 2040 - 0.59
2040 – 2045 - 0.51
2045 – 2050 - 0.45

புதன்கிழமை வாழ்த்துக்கள்