தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 21. August 2011

பெரும் பொருளியல் நிலைத் தேக்கம்

பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் (Great Recession (சில நேரங்களில் குறைந்த தேக்கநிலை, நீள் தேக்கநிலை,என்றும் 2009இன் உலக தேக்கநிலை) 2000களின் பத்தாண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பொருளியல் சரிவைக் குறிக்கிறது. 

 இத்தேக்கநிலையின் தாக்கம் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருந்து வந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் இந்த தேக்கநிலை எப்போது துவங்கியது, முடிந்தது என்பதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன; 

சில நாடுகள் இத்தேக்கநிலையை உணரவில்லை.   சீன மக்கள் குடியரசு, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் எவ்வித தேக்கநிலையையும் எதிர்கொள்ளவில்லை.

 ஐரோப்பாவிலிருந்த பல நாடுகள் முதலாவதிற்கு ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தேக்கநிலையையும் எதிர்கொண்டன.

இந்த இரண்டாவது தேக்கநிலையை ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் எதிர்கொள்ளவில்லை.


இந்தப் பொருளியல் நிலைத் தேக்கம் உலகப் பொருளியல்நிலையில் பெரும் தாக்கமேற்படுத்தியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான மோசமான உலகளாவிய தேக்கநிலையாக இது அமைந்தது.

இந்தப் பெரும் சர்வதேச பொருளாதார மந்தநிலையின்போது பல நிதிநெருக்கடிகள் ஏற்பட்டன;

இந்த மந்தநிலை ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கலாலும் 2008-2009 உலகப் பொருளாதார நெருக்கடியாலும் உருவானது. ஐரோப்பிய அரசுகளின் கடன் நெருக்கடி சிக்கன நடவடிக்கைகள், உயர்ந்த குடும்பக் கடன்கள், வணிக சமமின்மை, உயர்ந்தநிலையிலான வேலையின்மை, 2014இல் குறைந்த வளர்ச்சி எதிர்பார்ப்பு  போன்றவற்றின் தாக்கங்களால் பல நாடுகளில் முழுமையான மீளப் பெறுகைக்கு தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.