தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 8. August 2011

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்ன?

இன்றையகாலப்பகுதியில் உலகநாடுகள் பல 
 எதிர்நோக்குகின்ற உணவுப் பொருள்தட்டுப்பாடு 
விலையதிகரிப்பு அவற்றிற்கான காரணங்கள் 
 சம்பந்தமாக இங்கே ஆராயப்படுகின்றன உலக 
அமைதியை பாரதூரமாக அச்சுறுத்தக்கூடிய 
 காரணிகளுள் ஒன்றாக இன்று உணவு காணப்படு
கின்றது உணவுப் பொருட் களின் அதிகரித்த 
விலைகள் (சிலபொருட்களின் விலைகள் இரண்டு 
வருட காலப் பகுதியில் இருமடங்காகியுள்ளன) 
 பல நாடுகளிலும் கலவரங்களையும், ஆர்ப் 
பாட்டங்களையும் தோற்றுவித்திருக்கின்றன
மெக்சிக்கோவிலிருந்து பாக்கிஸ்தான் வரை 
 எதிர்ப்பார்ப்பாட்டங்கள் வன்முறைகளாக 
மாறியுள்ளன[9]. 2008 ஜனவரியில் மேற்கு ஆபிரிக்க 
நாடான Burkina Faso இல் மூன்று நகரங்களில் 
கலவங்கள் ஏற்பட்டு அரச கட்டடங்கள் எரியூட்டப்
பட்டன, களஞ்சியங்கள் சூறையாடப்பட்ட்டன 
அதே மாதத்தில் கமரூனில் நடந்த வண்டி ஓட்டுனர் 
களின் எண்ணைவிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
உணவு விலைகளுக்கு எதிரான மிகப்பெரியதொரு 
ஆர்ப்பாட்டமாக மாறி 20 பேரின் உயிர்களை காவு 
 கொண்டது .அதே மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் 
கடந்தவருட இறுதியில் செனகலிலும், Mauritania 
விலும் வெடித்திருந்தன.கடந்த ஒக்டோபர்
 மாதத்தில் இந்திய மேற்கு வங்கத்தில் 
ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கான உணவு-
நிவாராண களஞ்சியங்களை எரியூட்டியிரு
ந்தார்கள். களஞ்சியங்களின் உரிமையாளர்கள் 
அரச நிவாரணப்பொருட்களை கருப்பு சந்தையில்
 விற்பதாக அங்கே ஆர்ப் பாட்டக்காரர்கள் குற்றம்
சாட்டியிருந்தார்கள்[9]. மொத்தத்தில் உலக 
அமைதிக்கு பெரியதொரு அச்சுறுத்தலாக இந்த 
உலகளாவிய உணவுநெருக்கடி மாறி 
இருக்கின்றது. ஆசியநாடுகளில் கடந்த மூன்று 
 தசாப்தங்களாக ஏற்படுத்தப்பட்ட பசுமைப்
புரசியின் காரணமாக உணவுநெருக்கடியின் 
தாக்கம் மிகப்பாரதூரமாக இல்லாவிட்டாலும், 
ஆபிரிக்காவிலோ நிலைமை மிக மோசமடைந்து
விட்டது. அங்கே மக்கள் உணவின்றி தவிக்கும்
 நிலை உருவாகியிருக்கின்றது.கடந்த ஒரு வருட
 காலப்பகுதிக்குள், அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப்பொருட்களின் விலைகள் ஏறக்குறைய 
இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. உலகிலுள்ள 
மிக வறிய மக்களில் ஏறக்குறைய 100 மில்லியன் 
மக்கள் இப்போது, உணவிற்காக செலவளிக்க 
முடியாத நிலையிலுள்ளார்கள் என ஐ.நா சபை 
அண்மையில் கணிப்பிட்டுள்ளது. இலங்கையில் 
உணவுப்பொருட்களின் விலைகள் முன்னைய 
ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, கணிசமான 
அளவுக்கு உயர்ந்து ள்ளன. சாதாரண வறுமைக்
கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு, எகிறிச்செல்லும் 
உணவுபொருடகளின் விலைகள் பெரும் பிரச்சினை
களாக மாறியுள்ளன. அரசியல், இலஞ்ச ஊழல்
 நடவடிக்கைகளுடன், இந்த உலகளாவிய உணவுத்
தட்டுப்பாடும், உணவுப் பொருட்களின் விலைகளை 
தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.கீழே 
உலகளாவிய இன்றைய உணவுத் தட்டுப் பாட்டுக்கு
காரணமான ஐந்து விடயங்கள் ஆராயப்படுகின்றன,

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.