தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 28. Juli 2011

உலக உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை

இரண்டாவது உலகப்போரின் பின்னர் குடித்தொகை திடீர் 
வளர்ச்சிப்போக்கில் சென்றது.விவசாயத்துறை உற்பத்தித்
திறனில் வீழ்ச்சிப்போக்கில் சென்றது.உணவு உற்பத்திக்காக
உற்பத்திசெய்யப்படும் தானியங்களில் பெரும்பகுதி 
எரிபொருள்தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றது
.மக்களின் விலங்குஉணவு நுகர்வுஅதிகரித்ததின் காரணமாக 
உணவுக்காக உற்பத்திசெய்யப்படும் ஒருபகுதித்தானியங்கள் 
விலங்குகளுக்கு உணவாகப்பயன்படுத்தப்பட்டது. 
விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை
 குறைவடைந்து சென்றமை போன்ற உலக உணவு பற்றாக்
குறைக்கு பிரதான காரணங்களாக சுட்டிக் காட்டப்படுகின்றது.
உலக உச்சி மாநாடுகளின் பிரகடனங்கள் எவையும் உலக 
உணவு உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை. ஒவ்வொரு 
நாடுகளும் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் பெரும் நிதியை 
உணவு உற்பத்தி அடிப்படை நடவடிக்கைகளுக்கு ஒதுக்க
வேண்டும்.இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் 
நாடு நில ஆக்கிரமிப்புக்கும் பொருளாதார சீரழிவுக்கும் வித்திட
க்கூடிய வகையில் யுத்தத்திற்கு கூடிய நிதியை ஒதுக்கியதன்
விளைவே ஒரு விவசாய நாடான இலங்கையில் ஒரு கிலோக்
கிராம் அரிசி நூறுரூபா மேல் தென்பகுதியில் விற்கப்படுகின்றது .
எனவே, ஒரு நாடு உணவு உற்பத்தியில் மேம்பட வேண்டுமாயின் 
பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.உட்கட்ட
மைப்புக் களான வீதி அமைத்தல்,பாலம் அமைத்தல், நீர் வாய்க்
கால்களை அமைத்தல்,குளம் புனரமைத்தல் போன்ற நடவடிக்கை
களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலீடுகளை மேற்கொள்ளல்.
விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களுக்கு ஊக்குவிப்பு
க்களை வழங்கல், விவசாய கல்வியைப்புகட்டுதல் முறையான 
கமத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகளை 
வழங்குதல். அத்துடன் பசளை, எரிபொருள் முதலான விவசாய
 உள்ளீடுக ளுக்குரிய விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் .
இரசாயன உரவகைகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடியதான கூடிய 
விளைச்சல் தரவல்ல பயிர் இனங்களை அறிமுகம் செய்தல் 
இவ்விடய ங்களை முதன்மைப்படுத்தி ஒவ்வொரு அரசும் நிதி 
ஒதுக்கீடு செய்து மேற்தர ப்பட்ட செயற்பாட்டில் முதலீடு 
செய்தால் நிச்சயம் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். 
2100 ஆம் ஆண்டு உலக சனத்தொகை தற்போது இருக்கும் 
சனத்தொகையைவிட இரண்டு மடங்காக உயரும் நிலை 
இருப்பதால் உலக உணவு உற்பத்தி யையும் இரண்டு மடங்காக
 அதிகரிக்க சகல தரப்பினரும் முன்வர வேண்டும். 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.